நஸ்ரியா சரியான படம் அமையும் போது நடிப்பார் – பகத் பாசில்

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் ரசிகர்கள் அனைவர் மனதையும் ஈர்த்தவர் நடிகை நஸ்ரியா.இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டார். அவருடைய கணவர் பகத் பாசில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்.அவரிடம் நஸ்ரியா மீண்டும் நடிக்க வருவது பற்றி கேட்டபோது, “அவரை நான் பூட்டிவைக்கவில்லை, சரியான படம் அமையும் போது அவர் நடிக்கவருவார். அப்படி நடந்தால் நான் வீட்டிலேயே இருந்து குடும்பத்தை பார்த்துக்கொள்வேன்” என்று கூறியுள்ளார்.