நான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் – ஜாக்பாட் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா புகழாரம் !

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா, ரேவதி நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 2-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது, என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட். அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து யோசித்து தான் செய்வார். தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி மிகச் சரியான மதிப்பீட்டை வைத்திருப்பார்கள்.