Cine Events
நீண்ட நாள் கழித்து தல அஜித் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி !

கமலஹாசனின் 65 வது பிறந்த நாள் மற்றும் திரையுலகில் அவரின் 60 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக நவம்பர் 17ல் சென்னையில் உள்ள நேரு உல் விளையாட்டு அரங்கத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சி மற்றும் பாராட்டு விழா பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. அதற்கான ஒத்திகை நடந்துவருகிறது. இந்நாகழ்ச்சியில் கமல் வாழ்த்த ரஜினி உள்பட இந்திய திரையுலகின் பெரும்பாலான சினிமா கலைஞர்கள் பங்கேற்க உள்ளார்கள். இந்நிலையில் தான் நடித்த படங்களின் ப்ரமோஷன்களில் கூட கலந்து கொள்ள விரும்பாத அஜித்திற்கும் கமல் சார்பில் விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். சீனியர் நடிகர் கமலஹாசனுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா என்பதால் இந்த விழாவில் அஜித் கண்டிப்பாக கலந்துகொள்வாரென நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள்.