“பண்டிகை” வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.

நடிகை விஜயலட்சுமி தயாரிக்க அவரது கணவர் பெரோஸ் இயக்கி உள்ள படம் பண்டிகை. கிருஷ்ணா, ஆனந்தி நடிக்கிறார்கள். ஆர்.எச்.விக்ரம் இசை அமைத்துள்ளார், அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.

படத்தின் கதை கரு : சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சட்ட விரோத சண்டை போட்டிக்கு தள்ளப்பட்ட ஓர் கோபக்கார இளைஞனின் காதல்  தான் பண்டிகை. காதலிலும்  ஆக்ஷனிலும்  சரியான அளவில் பயணிக்கும் படம் இது. சுருக்கமாக கூறவேண்டுமென்றால் பண்டிகை” மக்கள் திரையரங்குகளுக்கு வந்து கொண்டாட்டதுடன்  ரசிக்க வேண்டிய படம் என கூறினார் இயக்குனர் பெரோஸ்.