பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சினிமா பயிற்சி கல்லூரி தொடங்குகிறார்

இந்திய திரைப்படத் தொழிலில் சின்னமான திரைப்பட தயாரிப்பாளர் “இயக்குனர் இமயம்” பாரதிராஜா . தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ராதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர். சில படங்களில் நடித்தும் உள்ளார்.
அனுபவம் நிறைந்த பாரதிராஜா தன் அனுபவத்தையும் தான் கற்றதையும் வருங்கால சந்ததிக்கு தரும் வகையில் பாரதிராஜா இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சினிமா என்ற பெயரில் திரைப்பட பயிற்சி கல்லூரி ஒன்றை தொடங்கி உள்ளார். இதில் நடிப்பு, ஒளிப்பதிவு இ யக்கம், எடிட்டிங், சவுண்ட் டிசைனிங், சண்டை இயக்கம், நடன இயக்கம், தயாரிப்பு நிர்வாகம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பாரதிராஜாவின் தலைமையில் அந்தந்த துறை சார்ந்த நிபுணர்கள் இந்த பயிற்சியை அளிக்க இருக்கிறார்கள்.