பாவனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. சமீபத்தில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து, காரில் சென்ற போது, ஒரு கும்பலால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது குறித்து,விசாரித்த​ போலீஸ்  சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தனர்.

இந்நிலையில், பாவனாவுக்கும், கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் நேற்று, கேரள மாநிலம், திருச்சூரில் நிச்சயதார்த்தம் நடந்தது.விரைவில் திருமண தேதி அறிவிக்கப்பட உள்ளது. பாவனாவுக்கு, திரை நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.