பிரம்மாண்டமாக தொடங்கிய காப்பான் இசை வெளியீட்டு விழா

காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. விழா மேடையில் தோன்றி வணக்கம் சொன்னார் விழா நாயகன் சூர்யா. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், இயக்குநர் சங்கர் மத்தியில் சூர்யா அமரும் வண்ணம் இருக்கைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நானும் கே.வி.ஆனந்த்துடன் படம் செய்திருக்கவேண்டியது. ஆனால் அதை நான் தான் தவறவிட்டுவிட்டேன். மோகன்லால் இயற்கையான நடிகர். சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் தெரிந்தது புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினி பேசினால் மோடிக்கு கேட்டிருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டுள்ளது. சூர்யாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் என்று தெரிவித்தார்.