புதிய​ தர்மதுரை படக்குழுவினர் ரஜினியை சந்தித்து ஷீல்டு வழங்கினர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான தர்மதுரை டைட்டிலில் விஜய்சேதுபதி நடித்தார்.இதில் இவருக்கு ஜோடியாக தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே உள்பட பலர் நடித்தனர்.சீனு ராமசாமி இயக்கிய இந்த​ படத்தை ஸ்டூடியோ 9 ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார்.இதற்கு யுவன் இசை அமைத்திருந்தார்.

தற்போது இப்படத்தின் 100 வது நாள் விழாவை சமீபத்தில் நடத்தி அனைவருக்கு ஷீல்டு கொடுத்தனர்.இப்படத்தின் டைட்டிலை பயன்படுத்திக்கொள்ள ரஜினியும் அனுமதி ஒரிஜினல் தர்மதுரையை அவரது அலுவலத்தில் சந்தித்து 100வது நாள் ஷீல்டை கொடுத்தனர்.இந்த சந்திப்பில் படத்தின் அம்சங்களை குறிப்பிட்டு அவற்றை பாராட்டினார்.விஜய் சேதுபதி,தமன்னா, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் இயல்பான நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் சீனு ராமசாமியின் படங்களில் அவர் கவனித்து வரும் சமுக அக்கறையையும் பாராட்டினார்.