புதுமுகங்களுடன் இயக்குநர் சுசீந்திரன்

விக்ராந்த்  நடித்துள்ள 'அறம் செய்து பழகு' சுசீந்திரன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் பணிகளை முடித்த உடனேயே, அதாவது அறம் செய்து பழகு படம் வெளியாவதற்கு முன்பாகவே தனது அடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்கினார் சுசீந்திரன். தற்போது ஏறக்குறைய 60 சதவிகித படப்பிடிப்புகளை முடித்து விட்டார்!

தற்போது இயக்கி வரும் புதிய படத்திலும் பெரும்பாலும் புதுமுகங்களே நடிக்கின்றனராம்.இந்த படத்தில் தெரிந்த முகம் என்றால் சூரி மட்டும் தான். கல்லூரி மாணவர்களை சுற்றி நடக்கும் கதைக்களம் கொண்ட இப்படத்திற்கு ஒரு பெண்ணின் பெயரை தலைப்பாக சூட்ட உள்ளார் சுசீந்திரன். இந்தமாதம் இறுதியில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது.