பைரவா ப்ரீ-புக்கிங் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
பைரவா விஜய் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும்நிலையில். திரைப்படமான இதனை இயக்குநர் பரதன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவான அழகிய தமிழ் மகன் திரைப்படத்தை இயக்கியவராவார். விஜயா புரொடக்சன்சு நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், சதீஸ், ஜெகபதி பாபு ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இது விஜய் நடிக்கும் 60ஆவது படமாதலால் முன்னதாக விஜய் 60 என்று அறியப்பட்டு பின்னர் 2016 செப்டம்பரில் பைரவா எனப் பெயரிடப்பட்டது
சத்யம் திரையரங்கில் 'பைரவா' படத்திற்கான ப்ரீ புக்கிங்கை துவங்கிவிட்டனர். புக்கிங் ஆரம்பித்த சில மணி நேரத்திலேயே முதல் மூன்று நாட்களுக்கான நான்கு காட்சிகளும் விற்றுத்தீர்ந்தன. டிக்கெட் விற்பனை ஜெட் வேகத்தில் நடைபெற்று முடிந்ததால், பைரவா படம் வசூலில் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என்று சொல்கின்றனர். படம் வியாழக்கிழமை அன்று வெளியாக இருப்பதால் பொங்கல் விடுமுறையையும் சேர்த்து முதல் 5 நாட்களில் 'பைரவா' படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும் என்றும் அந்த 5 நாட்களில் பல கோடி வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.