‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அமிதாப்பச்சன்- ஐஸ்வர்யாராய்?

பொன்னியின் செல்வன்' என்ற கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவிய நூலை தழுவி திரைப்படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.'செக்க சிவந்த வானம்' வெற்றிப்படத்தை தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' நூலை திரைப்படமாக்க இந்த படத்தில் விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி, போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கவிருப்பதாகவும் படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் படத்தின் இரு முக்கிய கதாபாத்திரங்களில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யராயை நடிக்க வைக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.