“மரகத நாணயம்” கல்லா கட்டுமா !!!

சமீபத்தில் புதுமுக இயக்குநர் ஆர்கே.சரவன் இயக்கத்தில், நடிகர்கள்: ஆதி, நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், காளி வெங்கட், ஆனந்த் ராஜ் என ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம் மரகத நாணயம். இதுவும் பேய் படம் தான் என்றாலும் அதை முற்றிலும் புதிய கோணத்தில் ரசிகர்கள் ரசிக்கும்படி காமெடியாக சொல்லியிருந்தார் இயக்குநர். இதனால் விமர்சகர்கள் மத்தியிலும் இப்படம் பாராட்டை பெற்றது. ஆனால் படத்திற்கு போதுமான கலெக்ஷ்ன் தான் இல்லையாம். இதனால் தயாரிப்பாளர் சற்று வருத்தத்தில் உள்ளார்.