‘மான்ஸ்டர் பட இசை வெளியீட்டு விழா – எஸ்.ஜே. ஒரு குழந்தையை போல் பார்த்துக்கொண்டார் பவானி சங்கர் !

’ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் இயக்கும் அடுத்த படம் ‘மான்ஸ்டர்’. எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், முக்கிய காமெடி பாத்திரத்தில் கருணாகரனும் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர இசையமைக்கிறார். இப்படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை நடந்தது. படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட இவ்விழாவில் பேசிய நடிகை பிரியா பவானி சங்கர்,”நெல்சன் சார் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா சாருக்கு ஜோடியாக நடிக்கவேண்டுமென்று வேண்டுகோள் வைத்தபோது உண்மையிலேயே பயந்தேன். காரணம் அவர் பயங்கர கோபக்காரர் என்று கேள்விப்பட்டிருந்தேன். படப்பிடிப்பில் கலந்துகொண்டபிறகுதான் அவரது குழந்தைத் தன்மை தெரிந்தது. படப்பிடிப்பு முடியும் ஒவ்வொரு நாளும் அவ்வளவு பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைப்பார், மிக மிக அக்கறையுடன் அவர் என்னை ஒரு குழந்தையைப் போல் பார்த்துக்கொண்டார்’ என்கிறார் பிரியா பவானி சங்கர்.