Cine Events
மாவீரன் கிட்டு படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்-சுசீந்திரன்
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு-ஸ்ரீதிவ்யா,பார்திபன் மற்றும் பலர் நடித்துள்ள படம் மாவீரன் கிட்டு இப்படத்திற்கு, நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என, இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.வெண்ணிலா கபடிக் குழு, ஜீவா படத்தை அடுத்து, இயக்குனர் சுசீந்திரன் – நடிகர் விஷ்ணு இணைந்துள்ள படம், மாவீரன் கிட்டு. இப்படத்தின் முதல் போஸ்டர் மற்றும் முன்னோட்டம், சென்னையில் வெளியிடப்பட்டது.
அதில், சுசீந்திரன் பேசுகையில், அழகர்சாமியின் குதிரை படத்தை போல, மாவீரன் கிட்டு படத்திற்கும், எனக்கு தேசிய விருது கிடைக்கும், என்று கூறியுள்ளார்.அதேபோல் பார்த்திபன் பேசுகையில், இப்படம், எனக்கு நல்ல பெயர் வாங்கித் தரும்; என்கதாபாத்திரம் அந்தளவுக்கு உள்ளது. இப்படத்திற்காக, நான் நிறைய விருதுகளை வாங்குவேன், என்றும் அவர் கூறியுள்ளார்.