மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா

விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. மாஸ்டர் படத்தின் டிரைலர் வருகிற மார்ச் 22-ந் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.