மெர்சல் டப்பிங் ஆரம்பம்…

'தெறி' வெற்றிப் படத்தை தொடர்ந்து  அட்லியும், விஜய்யும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் – 'மெர்சல்'. இந்தப் படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.  தீபாவளிக்கு முன்னிட்டு மெர்சல் படம் வெளியாகவிருக்கிறது. எனவே படத்தின் டப்பிங் பணிகள்  தொடங்கியது. சென்னையில் சமீபத்தில் துவங்கப்பட்ட 'KNACK STUDIO'வில் பூஜையுடன் துவங்கியது.

மெர்சல் படத்தின் இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர் ராமசாமி மற்றும் பலர் இந்த பூஜையில் கலந்துகொண்டனர்.  'மெர்சல்' படத்திற்கான டப்பிங் மற்றும் மிக்சிங் வேலைகள் அனைத்தும் இந்த புதிய ஸ்டுடியோவில் தான் நடைபெறவிருக்கிறதாம்.

KNACK STUDIO'வில் ஆசியாவிலேயே இல்லாத அதிநவீன உபகரணங்கள் உள்ளத குறிப்பிடத்தக்கது.