மெர்சல் படத்தின் ரிசர்வேஷன் பற்றியா தகவல்! இதுவரைக்கும் பார்க்காத சாதனை இது!

விஜய்யின் மெர்சல் படத்தில் ரிசர்வேஷன் தொடங்கி நடந்துவருகிறது. இப்படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தொடர்பாக சிக்கல் இன்னும் நீடிக்கிறது.  இந்நிலையிலும் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் ரீசர்வ் செய்துவருகின்றனர். நெல்லை ராம் முத்துராம் தியேட்டரில் முன்பதிவு தொடங்கி 20 நிமிடத்தில் விற்று தீர்ந்துவிட்டதாம். வழக்கமாகி ரிலீஸுக்கு முந்தைய நாள் அல்லது இரண்டு நாட்கள் முன்பு தான் FDFS டிக்கெட்டுகள் விற்று தீருமாம். ஆனால் இப்படம்  20 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்துவிட்டது. அதை வாங்க சென்னை, கேரளாவில் இருந்து கூட ரசிகர்கள் அங்கு வந்துள்ளனர்.