ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டுள்ள சித்தார்த்!

பாய்ஸ் படத்தின் மூலம் நாயகனாக​ அறிமுகமானவர் சித்தார்த்.இவர் தற்போது தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் சேர்த்து 4 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் சைத்தான் கா பச்சா படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், மற்ற 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.மேலும்,  காதல் நாயகனாக வலம்வந்து கொண்டிருந்த அவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் முதன்முறையாக ஆக்சன் நாயகனாக​ இறங்கினார்.அதையடுத்து இப்போது ஆண் என்ற படத்தில் ஹாரர் கதையில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபகாலமாக ஏராளமான படங்கள் பேய் கதைகளில் வந்து கொண்டிருப்பதால் தனது படம் அந்த படங்கள் சாயலில் இல்லாமல் புதுமையான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான கெட்டப்பில் தோன்றும் சித்தார்த், தனது கெட்டப்பை படம் திரைக்கு வரும் வரை வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்து தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவெடித்துள்ளாராம்