ரஜினிகாந்த், மலேசிய பிரதமர் இருவரும் சந்தித்தனர்.

தென்னிந்திய  நடிகர் சங்கத்தின் நட்சத்திர  விழா  நாளை  நடைபெற உள்ளதால்  இதில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் மலேசியா  சென்றுள்ளார்.  மலேசியாவில் அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில்   மலேசிய  பிரதமர்  நஜிப்  ரசாக்யை   அவர்களை சற்றுமுன் ரஜினிகாந்த் சந்தித்தார்.  லைகா  நிறுவனத்தில் இருந்து விலகிய ராஜி  மகாலிங்கம்  தனது சமூக வலைத்தளத்தில் இந்த சந்திப்பு குறித்த தகவலை  பதிவு செய்துள்ளார். இதற்கு முன் இவர் “கபாலி” படப்பிடிப்பிற்காக  மலேசியா  சென்றிருந்தபோதும் பிரதமரை  சந்தித்தார்  என்றும், கடந்த மார்ச் மாதம் மலேசிய பிரதமர்  இந்தியாவிற்கு வந்திருந்த போது  சென்னை போயஸ் தோட்டத்து  இல்லத்தில்  இருவரும் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.