ரஜினியின் வீட்டிற்கு இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னையில், நடிகர் ரஜினி காந்த், தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியை, 5 நாட்கள் நடத்தினர். இதில் பேசிய ரஜினி, அரசியலில் ஈடுபட போவதாக மறைமுகமாக கூறினார். இதற்கு பலர் ஆதரவும், பலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் தமிழக அரசியலில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து, தமிழர் முன்னேற்றப் படையினர், இன்று காலை, 11.30 மணிக்கு ரஜினியின் வீடு முன்பு போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் வீட்டிற்கு இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.