விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த ஆஸ்கார் விருது

நேற்று உலகம் முழுவதும் கலை துறையினர் எதிர்பார்த்த ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் லா லா லேண்ட், மூன்லைட் ஆகிய படங்கள் ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. இந்நிலையில் தமிழ் இயக்குனர் ஒருவர் 'இறைவன் எனக்கு கொடுத்த ஆஸ்கார் விருது இதுதான்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் வேறுயாரும் இல்லை 'போடா போடி' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான​ நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன்.இவர் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பா? அல்லது அடுத்த படம் குறித்த ஆலோசனையா? என்று தெரியவில்லை. ஆனால் இந்த சந்திப்பு குறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'ஆஸ்கார் விருது வழங்கப்பட்ட இந்த நாளில் இறைவன் எனக்கு தந்த ஆஸ்கார்' என்று கூறியுள்ளார்.