Cine Events
விக்ரமின் ‘சாமி 2’ லோகோ
விக்ரம் நடித்து வெளியான 'இருமுகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஹரி, விக்ரம் நடிப்பில் 'சாமி 2' திரைப்படம் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் 'சாமி 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் லோகாவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தை சிபுதமீன்ஸ் தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் இயக்குனர் ஹரி தீவிரமாக இருப்பதாகவும், கவுதம் மேனனின் 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பை விக்ரம் முடித்தவுடன் ஹரியுடன் அவர் இணைந்து 'சாமி 2' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.