விஜய் சேதுபதியின் ஆதங்கம்.
கீ” படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழிச்சியில் விஜய் சேதுபதி சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்களின் நிஜ வாழ்க்கையை பற்றி அனைவரையும் கவரும் விதத்தில் பேசியிருந்தார். சினிமாகாரர்களை தரம் தாழ்த்தி பேசுகிறவர்கள் சினிமாவிற்கு வந்து ஒரு படம் எடுத்து பாருங்கள் அப்போது தெரியும் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்களுக்குரிய பிரச்னைகள். ஒரு படம் எடுத்து முடிப்பதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது. படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளரை பாராட்ட வேண்டும் அந்த படம் ஓடுமா இல்லையா என்று தெரியாமல் ஒரு வெற்றியை நம்பி அதிக அளவில் முதலீடு செய்கிற தயாரிப்பாளரின் தைரியத்தை பாராட்ட வேண்டும். தொடர்ந்து நான்கு படம் ஓடவில்லை என்றால் யாரும் யார் விட்டு பக்கமும் வரவே மாட்டார்கள். வெற்றியடைந்து ஓடிக்கொண்டிருந்தால் தான் இங்கு மதிப்பு. நாம் சோர்ந்து போனால் இந்த இடத்திற்கு இன்னொருவன் வருவான் என்று ஆவேசத்தை வெளிபடுத்தினார்