விஜய் 61வது படத்தில் அட்லியின் செண்டிமென்ட் நாயகி

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பைரவா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் இப்படத்தை தொடர்ந்து,  அட்லி இயக்கத்தில் தெறியை அடுத்து விஜய் நடிக்கும் 61வது படத்தில் நயன்தாரா- காஜல் அகர்வால் என்ற இரண்டு முன்னணி நடிகைகளுக்கும் வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.மேலும், அட்லி இயக்கிய ராஜாராணி படத்தில் நாயகியாக நடித்தவர் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படம் வெற்றி பெற்றதால் செண்டிமென்ட் காரணமாக தனது அடுத்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் அட்லி. அதுகுறித்து விஜய்யிடம் ஒப்புதல் வாங்கி விட்ட அவர், இப்போது நயன்தாராவிடம் கால்சீட் பேசியுள்ளாராம். அதோடு. இதே படத்தில் இன்னொரு நாயகியும் இருப்பதால் அந்த வேடத்தை காஜல் அகர்வாலுக்கு கொடுக்கும் யோசனையில் உள்ளாராம் அட்லி.