Cine Events
விஜய் 63 – படப்பிடிப்பு பொங்கலுக்கு பின் தொடங்கவுள்ளது!

விஜயின் 'சர்க்கார்' படவெற்றியைத் தொடர்ந்து அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.தெறி,மெர்சல் ஆகிய படங்கள் வெற்றியாகியுள்ளதால், இந்த படத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்க, கதாநாயகியாக நயன்தாரா மற்றும் விவேக்,யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான்,ஒளிப்பதிவு ஜி.கே.விஷ்ணு, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிற படத்தை வருகிற தீபாவளிக்கு வெளியிடவிருக்கிறார்கள்.