விஷ்ணுக்கு ஜோடியாக அமலாபால்

அமலா பால் திருமணத்துக்கு முன்புவரை விஜய், விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருந்தார்.தற்போது இயக்குநர் விஜய்யை-அமலா பால் திருமணம் செய்து பின்னர் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.இந்த​ சூழலில் விஐபி 2, வடசென்னை படங்களில் தனுஷ் உடன் நடித்தாலும், பாபிசிம்ஹா, விஷ்ணுவிஷால் போன்ற இரண்டாம்நிலை ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

'முண்டாசுப்பட்டி' படத்தைத் தொடர்ந்து ராம்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் விஷ்ணுவிஷால் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் அமலாபால்.இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் 29 ஆம் தேதி சென்னையில் துவங்கவிருக்கிறது.