விஷ்ணு-ரஜினி தம்பதிக்கு கிடைத்த பரிசு

'வெண்ணிலா கபடிக்குழு' திரைபடத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இவருக்கும் ரஜினிநட்ராஜ் என்பவருக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தற்போது இந்த தம்பதி புரமோஷன் பெற்றுள்ளனர்.

அதாவது நேற்று விஷ்ணு-ரஜினி தம்பதிக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்துள்ளது.விஷ்ணு குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.எங்களுடைய வாழ்க்கையில் அதிகபட்ச சந்தோஷத்தை கொடுத்த இந்த தருணத்திற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் என்றும் அவர் பதிவு  செய்துள்ளார்.இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.