வெளியானது’காஞ்சனா 3 ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

காமெடி மற்றும் திகில் என தமிழ் சினிமாவில் புது டிரெண்ட் செய்த படம் ராகவா லாரண்ஸின் காஞ்சனா. முனி படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து காஞ்சனா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வசூல் சாதனை புரிந்தது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் திரையரங்கம் நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். அதுவரை பேய் படங்கள் என்றாலே பயம் ஏற்படுத்திக் கொண்டிருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவராலும் ரசிக்கக் கூடிய பேய் படமாக இது இருந்தது. மேலும், தற்போது காஞ்சனா 3 படத்தை ராகவா லாரண்ஸ் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் தெலுங்குக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது, போஸ்டரில் ராகவா லாரண்ஸ் வயதான கெட்டப்பில் அசத்தலாக நாற்காலியில் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார்.