ஹைட்ரோகார்பனுக்கு எதிராக​ தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்! – ஜி.வி.பிரகாஷ்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டபோது, மாநில ஆளுங்கட்சிக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அதையடுத்து மத்திய அரசுடன் ஆலோசிக்கப்பட்டு தமிழக சட்டசபையில் புதிய அவசர சட்டம் பிறப் பிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டது.இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஜி.வி.பிரகாசும் ஒருவர்.அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த அவர், கொம்பு வச்ச சிங்கமடா என்ற பெயரில் ஒரு ஜல்லிக்கட்டு ஆல்பமும் வெளியிட்டார்.

இந்நிலையில், தற்போது நெடுவாசலில் நடைபெற்று வரும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளார் அவர். கடந்த ஞாயிறன்று நெடுவாசல் போராட்டக்களத்துக்கு சென்றிருந்த ஜி.வி.பிரகாஷ், ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று, தமிழக அரசு இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றும் வரை போராட்டத்தை நிறுத்தக்கூடாது என்று பேசியுள்ளார்.