சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் பட பூஜை தொடங்கியது !

'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' படத்திற்கான பூஜை  சென்னையில் நடைபெற்றது. 'கேங்க் லீடர்' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான பிரியங்கா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் கேட்ட போது, இதில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளனர். சென்னை மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். அடுத்தாண்டு பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக உருவாகவிருக்கும் 'டாக்டர்' படத்தின் பயணம் இனிதே தொடங்குகிறது.