நம்பியார் நூற்றாண்டு விழா இளையராஜா, சிவகுமார் புகழாரம் !

மறைந்த நடிகர் நம்பியாரின் நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இளையராஜா, சிவகுமார் உள்ளிட்ட திரையுலகினரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சிவகுமார் நமீபியார் பற்றி பேசுகையில், சிவாஜியை விட கம்பீரமாக நடக்கக்கூடியவர். அந்த காலத்தில் வாழ்ந்த அணைத்து நடிகர்களும் நிஜ பலசாலிகள். அந்த வரிசையில் வந்தவர் நம்பியார் அவர்கள். பேரழகனாக இருந்தபோதிலும் ஏன் அவர் கதாநாயகனாக நடிக்கவில்லை என்பது இப்போதும் ஆச்சர்யமாக உள்ளது. நிஜத்தில் ராமராக வாழ்ந்தவர், மது, புகை இல்லாமல் தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்தவர் நம்பியார் அவர்கள். 50 வயதில் 60 முறை சபரிமலை சென்று வந்த மனிதர். வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவர். அவர் மகான் ஆகிவிட்டார். சிவகுமாரை தொடர்ந்து இசைஞானி இளையராஜா பேசுகையில், 1980 ல் முதன் முதலில் நம்பியாரிடம் சென்று மாலை போட்டு வந்தேன். எனது இல்லத்தில் இருந்து தான் அவர் தங்கி செல்வார். அது எனக்கு கிடைத்த பாக்கியம். அவர் தங்கி சென்ற இடம் இன்று வேத பாட சாலையாக மாறியுள்ளது. அவரிடம் நான் பெற்ற அனுபவம் மறக்கமுடியாதது. இந்த விழாவில் பங்கேற்றதை பெருமையாக நினைக்கிறன்.