2017 கோவா திரைப்பட விருது வழங்கிய பட்டியல் வெளியிடு

கோவாவில் நடந்து சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றவர்கள் பற்றிய விபரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 2017ம் ஆண்டின் சிறந்த சினிமா பெர்சனாலிட்டி விருது அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்காக தங்க மயில் விருது, ராபின் கேம்பிஸ்லோ இயக்கிய 120பிபிஎம் என்ற படத்திற்கு கிடைத்தது.
கனடா இயக்குனர் ஆடம் எகோயனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும், சிறந்த இயக்குனருக்கான வெள்ளி மயில் விருது ஏஞ்சல்ஸ் வியர் வொய்ட் என்ற சீன படத்தை இயக்கிய விவின் க்யூவிக்கு கிடைத்தது.
சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருது ராபின் கேம்பிஸ்லோ இயக்கிய 120பிபிஎம் படத்தில் நடித்த நேவால் பெரோசுக்கு கிடைத்தது.
சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருது டேக் ஆப் என்ற மலையாளப் படத்தில் நடித்த பார்வதிக்கு கிடைத்து.
சிறந்த அறிமுக இயக்குனருக்கான வெள்ளி மயில் விருது டார்க் ஸ்கல் என்ற படத்தை இயக்கி கிரோ ரஸேவுக்கு கிடைத்தது.