Cine Events
‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்
சூர்யா தற்போது நடித்துள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'S-3' திரைப்படம் வரும் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டு அதற்கான முன்பதிவும் தொடங்கியது.ஆனால் கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக தமிழக மக்களும், இளைஞர்களும் பெரும் போராட்டத்தில் இருந்தனர். மேலும் நேற்று ஜல்லிக்கட்டு பிரச்சனை முடிவுக்கு வந்தபோதிலும் பெரும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
அதன் காரணமாக 'S-3' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மீண்டும் மாற்றியுள்ளனர். அனேகமாக வரும் பிப்ரவரி 3ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.