Cine Gossips
அகல கால் வைத்து காணாமல் போன நடிகை !

மலையாளத்தில் கண்ணடித்து மிகவும் பிரபலமான நடிகை புகழின் உச்சிக்கு சென்றாராம். அந்த படத்தின் இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களிடம் என்னை வைத்து புரமோசன்கள் செய்யுங்கள் என்று அவரே கூறினாராம். அனைவரும் புகழ்ந்து புகழ்ந்து பேச நடிகைக்கு ஓவர் கெத்து வந்துவிட்டதாம். படம் வெளியாகி சரியாக ஓடாததால் நடிகை நொந்து போனாராம். மாறாக இந்த படத்திற்குப் பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். ஓவர் பில்டப் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும் என்று மலையாள திரையுலகில் பலரும் பேசி வருகிறார்களாம்.