Cine Gossips
அடிக்கடி வெளிநாடு பறக்கும் நாயகி!

பழைய தலைநகரின் பெயரில் திரைக்கு வந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், அந்த நடிகை. அவருடைய பூர்வீகம் கேரளா. வளர்ந்ததும், படித்ததும், மும்பையில். படப்பிடிப்பு இல்லை யென்றால் இவர் வெளிநாட்டுக்கு பறந்து விடுகிறாராம். அவருடைய வெளிநாட்டு பயணம் மர்மமாக இருப்பதாக ஒரு தயாரிப்பு நிர்வாகி கூறுகிறார். “அந்த பயணத்தில் மர்மம் எதுவும் இல்லை. அந்த நடிகைக்கு வெளிநாட்டு நண்பர்கள் அதிகம். அவர்களை சந்திக்கவே வெளிநாடு செல்கிறார்” என்கிறார், ஒரு சக நடிகர்!