அப்பா உதவியை நாடும் வாரிசு நடிகர்

அப்பா நடிகரின் சாயலை அப்படியே உரித்து வைத்து இருப்பது போல, அவரது நடிப்பும் வாரிசு நடிகருக்கு இயற்கையாகவே இருக்கிறது. முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. வாரிசு நடிகரின் முதல் படத்தின் தோல்விக்கு காரணமாக அந்த ஹீரோயின் சரியில்லை அதனால் தான் படம் ஓடவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்து வருகிறது. முதல் படமே தோல்வியை சந்தித்ததால் அடுத்த அடுத்த படங்களுக்கான வாய்ப்புகள் அந்த வாரிசு நடிகரை தேடி வரவில்லை. இதனால், அந்த வாரிசு நடிகர் கடும் அப்செட்டில் இருக்கிறார். எனக்கு மட்டும் ஏன்பா இப்படியெல்லாம் நடக்குதுன்னு அப்பா மடியில் படுத்துக் கொண்டு அழுது புலம்பி வருகிறாராம். மகனின் அழுகை காண சகிக்காமல், தான் அடுத்து நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றில், தன்னுடைய மகனையும் நடிக்க வைக்க திரைக்கதையில் சற்று மாறுதல்களை ஏற்படுத்தி தருமாறு மகனுக்காக மீண்டும் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.