அமலாபால்:பாலியல் தொல்லை

நடிகை அமலாபால் சென்னை தி.நகரில் நடன பயிற்சி மையத்தில்  ஒத்திகை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு தொழில் அதிபர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த காவல் நிலைய ஆய்வாளர், மற்றும் உதவி ஆய்வாளர் நேரடியாக சென்று விசாரித்து அந்த நபரை கைது செய்துள்ளனர். இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம், காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்ததற்கு நன்றியும் மற்றும் பாராட்டையும் தெரிவித்து, நடிகைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லையை வெளியே சொல்லாமல் இருக்கும் நிலையில் துணிச்சலாகவும், தைரியமாகவும், புகார் செய்தற்கு அவரை பாராட்டியது என்று அறிக்கையில் தெரியவந்துள்ளது.