ஆடை நடிகை விவாகரத்திற்கு அசுர நடிகர் தான் கரணம் – தயாரிப்பாளர் வேதனை தகவல் !

பீரியட் படங்களை இயக்கியவர் அந்த இயக்குனர், இவர் இயக்கிய படத்தில் நடித்தபோது இவருக்கும் ஆடை நடிகை இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். முதலில் இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள், பின்னர் ஒப்புக் கொண்டனர். ஆனால் திருமணமான வேகத்தில் இருவரும்  விவாகரத்து பெற்றுவிட்டனர். இதுகுறித்து இயக்குனரின் தந்தை அவரும் ஒரு தயாரிப்பாளர், இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கையில், திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க வேண்டாம் என்று தான் நடிகை முடிவு செய்திருந்தார். ஆனால் அசுர நடிகர் தான் தயாரித்த படத்தில் அவரை நடிக்க வைத்தார். அதன் பிறகே நடிகை மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். இது தான் இருவரும்  பிரிய முக்கிய காரணம் என்று தயாரிப்பாளர் வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.