ஆண்டரியா:நிர்வாணமாக நடிக்க தயார்….

நடிகை ஆண்டரியா எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார். கடந்தாண்டு ராம் இயக்கத்தில் தரமணி படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் மகளிர் தினம் தொடர்பாக சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியபோது “பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆணாதிக்கம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஒரு நடிகையின் திறமை அவர் எந்த ஹீரோவுடன் நடிக்கிறார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. தரமணி படத்திற்கு பிறகு ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பதால் மட்டும் மகிழ்ச்சி அடைந்து விடுவேன் என எதிர்பார்க்கிறார்கள். ஒருபோதும் எனக்கு அது சந்தோசம் இல்லை. படத்தில் நிர்வாணமாக கூட  நடிக்க தயார். ஆனால் அந்த கதையில் அந்த காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.