ஆர்.கே.நகரில் கமல் ஆதரவுடன் விஷால் போட்டியா?

விரைவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள உலக நாயகன் கமல்ஹாசன் அவர் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவாரா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. இந்நிலையில் கமல் ஆதரவுடன் விஷால் போட்டியிட போவதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.கமல் ஆதரவுடன் நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், மீண்டும் அவர் ஆதரவுடன் ஆர்.கே.நகரில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், விஷாலுக்கு தினகரன் அணியினர் ஆதரவு தரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் அதே நேரத்தில் சினிமா சங்கங்களின் தேர்தல் வேறு, அரசியல் தேர்தல் வேறு என்றும், விஷால் அரசியலில் குதிக்க இது சரியான நேரம் இல்லை என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் அறிவுறுத்தி வருகின்றார்களாம்.

இருப்பினும் திரையுலகில் பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் அவர்களது குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க ஒரு உறுப்பினர் தேவை என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.