இணையதளத்தில் வெளியான 2.ஓ பர்ஸ்ட் லுக்

'ஐ' படத்தை அடுத்து ஷங்கர் இயக்கி வரும் பிரமாண்ட படம் 2.ஓ. ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தில் ரஜினி,அக்சய்குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடிக்கின்றனர். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெரும் நிலையில், டிசம்பர் மாதத்தோடு படப்பிடிப்பு முடிந்து விடுமாம்.அடுத்த ஆண்டு படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்கப்படுகிறது.

இந்நிலையில், 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக்கை நவம்பர் மாதம் வெளியிடயிருப்பதாக அப்படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.ஆனால்,நேற்று இணையதளங்களில் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் ஒன்று வைரலாக பரவியுள்ளது. ஆனால் இது படக்குழுவினர் ரெடி பண்ணி வைத்திருந்தை யாரோ லீக் பண்ணி விட்டார்களா? இல்லை யாரேனும் ரசிகர்கள் வெளியிட்டுள்ளார்களா என்பது தெரியவில்லை.ஆனால், அப்படக்குழுவினரிடமிருந்து எந்தவித மறுப்பும் வெளியிடப்படவில்லை.