இத்தாலி பாடகரை விரும்பும் ஸ்ருதிஹாசன்

இத்தாலியை சேர்ந்த பாடகருடன், கமல் மகள் ஸ்ருதி காதல் வயப்பட்டுள்ளதாக கிசுகிசு வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில், முன்னனி கதாநாயகியாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். சமீபத்தில், லண்டன் சென்ற இவர், ராக் இசைக்குழுவை சேர்ந்த இத்தாலி வாலிபர் மைக்கேல் கார்செல்லை சந்தித்து பேசியுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மாறி விட்டதாம். இருவரும், காதலர் தினத்தை அடுத்து, லண்டனில் இருந்து மும்பைக்கு ஜோடியாக வந்தது, அவர்களின் காதலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்று திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.