இனி இந்த தவறை செய்யமாட்டேன் – வருந்தும் வீர நடிகை!

தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் வீரமான நடிகையாக நடித்துவந்தவர் சமீபத்தில் வெளியான படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாம். இதைப் பார்த்த பல இயக்குனர்கள், பல தயாரிப்பாளர்கள் நடிகையை அணுகி எங்கள் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுங்கள் என்று கேட்டிருக்கிறார்களாம். ஆனால், நடிகை ஒரு பாடலுக்கு இனி நடனம் ஆட மாட்டேன் என்று கூறிவிட்டாராம். அந்த பாடலுக்கு ஆடியதால் தன்னுடைய மதிப்பே போய் விட்டது என்று நினைத்து, இனிமேல் அந்த தவறை செய்ய மாட்டேன் என்று பலரிடமும் கூறி வருகிறாராம்.