இயக்குனருக்கு கிடுக்கிப்பிடி போடும் தயாரிப்பு நிறுவனம்

எந்த நேரத்தில் அந்த இயக்குனர் அந்த வெளிநாட்டு தயாரிப்பாளருடன்  கூட்டணி அமைத்தாரோ அப்போது பிடித்தது அவருக்கு தலைவலி. சமீபத்தில் இயக்குனர் மற்றும் அந்த பெரிய நடிகர் கூட்டணியில் வெளிவந்த படம் பெரிய அளவில் வசூலை பெற்றதாக தெரிகிறது. ஆனால் விநியோகஸ்தர்கள் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்பது தற்போது வரை தெரியவில்லை? அந்தப்படம் நடிகருக்கு எந்த பாதிப்பையும் தரவில்லை. ஆனால் இயக்குனர் மீது தான் எக்கச்சக்கமான குற்றங்கள் பதிந்தன. ஒரு இயக்குனருக்கு சுமார் 30 கோடி வரை சம்பளம் தருவதாக என அந்த வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனத்தையே சுற்றி வளைத்தனர் விநியோகஸ்தர்கள். இதனால் எப்படியாவது தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் இயக்குனர். எப்படியோ அடித்து பிடித்து பெண் இயக்குனரை  வீழ்த்திவிட்டு வெற்றி நடிகர் படத்தை வளைத்துப் போட்டார். ஆனால் தயாரிப்பாளரோ தமிழ் நாட்டில் முக்கிய தயாரிப்பு நிறுவனம், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைப்பதில் அவர்கள் கில்லாடி. இருந்தாலும் இவர்கள் கூட்டணியில் இதற்கு முன்பு வெளிவந்த படத்தில் இயக்குனருக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கவில்லை. ஆனால் பெரிய நடிகர் பட சம்பவத்திற்கு பிறகு இயக்குனரை ஒரு வழி பண்ணி விட்டார்களாம் அந்த நிறுவனம். சம்பளத்தை பாதியாக குறைத்து விட்டார்கள். மேலும் படத்தின் பட்ஜெட் இவ்வளவுதான் என்றும், இதற்குள் படம் எடுக்க முடிந்தால் நீங்கள் வெற்றி நடிகரை வைத்து இயக்கலாம் எனவும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இல்லையென்றால் நாங்கள் வேறு இயக்குனரை தேர்வு செய்து கொள்கிறோம் எனக் கூறிவிட்டனர். இதனால் ஆட்டம் கண்டு போன இயக்குனர் எப்படியாவது நடிகரை  வைத்து பெரிய அளவில் வெற்றி கொடுத்து விட வேண்டும் என அவர்களின் கண்டிசன்களுக்கு ஒத்துக்கிட்டாராம் (வேற வழி இல்ல).