இளம் நடிகைக்கு அடித்தது யோகம்

தமிழில் தற்போது கால் பதித்துள்ள நடிகை ஒருவர் முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகளை எளிதாகக் கைப்பற்றி வருகிறார். அண்டை மாநிலத்தை சேர்ந்த அழகுப் பதுமையான அந்தநடிகை  அவ்வூரின் முன்னணி நடிகையாகவே இருந்தாலும், தமிழில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாக இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவருக்கு அடித்தது யோகம், பெயரிலேயே அதிர்ஷ்டத்தை வைத்திருக்கும் அவருக்கு தமிழில் முன்னணி நடிகர்களுடன் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி அவர் அறிமுகமான அந்த படமும் நொடி பொழுதில் வெற்றியாகிவிடவே,  அம்மணிக்கு மனதில் சந்தோஷ அலைகள் அடிக்கத் தொடங்கின. முன்னணி நடிகர்களின் நடிக்கும் வாய்ப்புகள் அனைத்தும் அந்நடிகைக்கே கிடைத்துள்ளதால் சக நடிகைகள்
புலம்பித்தீர்க்கின்றனர்.