எஸ்.எஸ்.ராஜமெளலியின் இதிகாச படைப்பு

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது 'பாகுபலி 2' படத்தை இயக்கி முடித்துவிட்டு அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளில் பிசியாக உள்ளார்.இந்நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது அடுத்தபடமாக இதிகாச கதைகளில் ஒன்றான மகாபாரதத்தை திரைப்படமாக இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

'மகாபாரதம்' என்ற பிரமாண்டமான படத்தில் இந்தியாவின் மூன்று முக்கிய சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த், அமீர்கான் மற்றும் மோகன்லால் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்கப்படுகிறது.