ஏ. ஆர். முருகதாஸ்சின் அடுத்த படத்தில் விஜய்-யுவன் கூட்டணி, 14 வருடம் கழித்து இணைகிறதா!

இளைய தளபதி விஜய்யுடன் பணியாற்ற பல இசையமைப்பாளர்கள் போட்டி போடுவார்கள். அந்த வகையில் 2003-ம் ஆண்டு வெளிவந்த புதிய கீதை படத்திற்கு இசையமைத்தது யுவன் சங்கர் ராஜா. ஆனால், அதன் பின் என்ன ஆனது என்றே தெரியவில்லை, இந்த கூட்டணி ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையில் விஜய் அடுத்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்திற்கு அனிருத், ஜி.வி, ஹாரிஸ் என பல இசையமைப்பாளர்களின் பெயர் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அனால் இப்படத்தில் யுவன் தான் இசை என கிசுகிசுக்கப்படுகின்றது. இருந்தாலும் இதை படக்குழுவே சொன்னால் தான் உறுதியாகும்.