ஒரு பக்கம் நடிப்பு; மறுபக்கம் திருமண பேச்சு!

நான்கெழுத்து நடிகை திரையுலக்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் சளைக்காமல் நடித்து வருகிறார். புதுசு புதுசாக புதுமுகங்கள் வந்து இறங்கி கொண்டிருப்பதால், போட்டியை சமாளிக்க சம்பளத்தை குறைத்துக் கொள்ள அவர் தயாராகி விட்டார். இந்த நிலையில், அவருக்கு பெற்றோர்கள் திருமண பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பட வாய்ப்புகள் வராவிட்டால், திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெற்றோர்களிடம் வாக்குறுதி கொடுத்து இருக்கிறாராம், அந்த நடிகை!