கவர்ச்சியாக இனி நடிக்கமாட்டேன் என்பதால் என்னை ஒதுக்குகின்றனர்- கவர்ச்சி நடிகையின் ஆதங்கம் !

கவர்ச்சியாக நடித்து சலிப்பு ஏற்பட்டு விட்டது. ரசிகர்களும் என்னை கவர்ச்சியாக பார்த்து சலிப்படைந்து இருப்பார்கள். எனவே இனிமேல் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்றும்  குணச்சித்திர வேடங்களில் நடிப்பது என்றும் முடிவுசெய்திருந்தேன். நான் கவர்ச்சியாக நடிக்க மறுத்த பிறகு புதிய படங்களில் நடிக்க யாரும் அழைக்கவில்லை. இதனால் 2 வருடங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறேன் அதுபற்றி கவலைப்படவில்லை. மலையாள படங்களில் அதிகமாக வாய்ப்புகள் வருகிறது  நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைகின்றன. குணச்சித்திர வேடங்களில்தான் நடிக்கிறேன். தமிழில் தான் என்னை முழுவதுமாக ஒதுக்குகின்றனர்.