காதலரை கதைகேட்க விட்டு வேடிக்கை பார்க்கும் நடிகை: இது எங்க போய் முடியப் போகுதோ!

நன்றாக நடிக்கும் திறன் உள்ளவர் அந்த நடிகை. தனது நடிப்பால் பெரிய ஹீரோக்களையே மிரள வைத்தவர். அவர் வெளியே தைரியமான ஆளாக இருந்தாலும் வீட்டில் காதலர் சொல்படி தான் நடக்கிறாராம். நடிகையின் சார்பில் காதலர் தான் இயக்குநர்களிடம் கதை கேட்கிறார். கதை கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஸ்க்ரிப்ட் விஷயத்திலும் தலையிடுகிறாராம் காதலர். நடிகையும் காதலர் என்ன சொன்னாலும் சரி, சரி என்று செல்கிறாராம். நல்ல திறமை இருந்தும் சரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காவிட்டால் நிச்சயம் அவரின் கெரியர் அடிவாங்கும். இதை அவர் எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்கிறாரோ அவருக்கு அது அவ்வளவு நல்லது.